லத்தி எடுத்து அடிக்க சொல்றது ஆர்டர் இல்லடா... ஆஃபர்! ஆக்‌ஷனில் மிரட்டும் விஷால் - வைரலாகும் ‘லத்தி’ பட டிரைலர்

அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் விஷால், சுனைனா நடிப்பில் உருவாகி உள்ள லத்தி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

Share this Video

அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் விஷால் நாயகனாக நடித்துள்ள படம் லத்தி. இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். புதுமையான போலீஸ் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ள லத்தி படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர்.

லத்தி படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 22-ந் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு டிரைலரை வெளியிட்டார்.

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வெளியான 12 மணிநேரத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று யூடியூப்பில் டிரெண்டாகியும் வருகிறது. இதில் நடிகர் விஷால் பேசியுள்ள பஞ்ச் வசனமும் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

Related Video