கேப்டனாக விரும்பிய ஜிபி முத்து... டஃப் ஆன டாஸ்க்கை கொடுத்து கதறவிட்ட பிக்பாஸ் - வைரல் புரோமோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் முதல் கேப்டன் யார் என்பதை தேர்ந்தெடுப்பதற்காக கடினமான டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார் பிக்பாஸ்.

First Published Oct 17, 2022, 12:19 PM IST | Last Updated Oct 17, 2022, 12:21 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரம் ஜாலியாக் சென்றாலும் அவ்வப்போது சில சண்டைகளும் நடந்தது. ஆனால் இரண்டாவது வாரம் தான் ரியல் போட்டியே ஆரம்பமாகி உள்ளது. இந்த வாரம் வீட்டின் தலைவர் ஆகப்போவது யார் என்பதை தேர்ந்தெடுக்க கேப்டன்சி டாஸ்க் ஒன்றி வைக்கப்பட்டுள்ளது. அதில் சாந்தி, ஜனனி, ஜிபி முத்து ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

கார்டன் ஏரியாவில் நடக்கும் இந்த டாஸ்க்கில் கடிகாரம் போன்று வட்டமாக இருக்கும் ஒரு பலகையில் போட்டியாளர்கள் நிற்க வேண்டும். சுழலும் அந்த பலகையில் இருந்து விழாமல் இறுதிவரை நிற்பவரே இந்த டாஸ்கில் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவதோடு பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இந்த டாஸ்க்கில் சிறிது நேரம் தாக்குப்பிடித்து நிற்கும் சாந்தி கை வலித்ததால் இறங்கிவிடுகிறார். ஆனால் ஜிபி முத்துவுக்கும் ஜனனிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் ஒருமணி நேரத்திற்கும் மேலாக அதில் நின்றுள்ளனர். இதுகுறித்த காட்சிகள் புரோமோவில் இடம்பெற்று உள்ளன. இதைப்பார்த்த ரசிகர்கள் முதல் வாரமே இவ்ளோ டஃப் ஆன டாஸ்க்கா என வாயடைத்துப் போய் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... குவின்ஸியிடம் சில்மிஷம் செய்த அசல் கோளார்... வீடியோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - ஆக்‌ஷன் எடுப்பாரா பிக்பாஸ்?