Biggboss Promo: ஜிபி முத்துவை நிற்க வைத்து கலாய்த்த கமல்..! பாதாம்மை காட்டியது தப்பா போச்சே..?

நடிகர் கமல்ஹாசன் இன்று போட்டியாளர்களுடன் பேசும் காட்சி தான் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் வெளியாகியுள்ளது.
 

First Published Oct 15, 2022, 3:37 PM IST | Last Updated Oct 15, 2022, 3:37 PM IST

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கி இன்றுடன் ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், போட்டியாளர்களின்... நிறை.. குறைகள் பற்றி தெரிவிக்க முதல் முறையாக போட்டியாளர்கள் முன் கமல் தோன்றி பேசும் காட்சி தான் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.

போட்டியாளர்கள் அனைவரும் கமலுக்கு எழுந்து இன்று வணக்கம் கூறிய பின்னர்... கமல் ஒவ்வொருவரிடமும் மிகவும் ஜாலியாக பேசுகிறார். முதலாவதாக சாந்தியிடம் பேசும் போது... வரும் போது சொல்லி அனுப்பினார்கள், கொஞ்சம் ஏமாந்தீர்கள் என்றால், உங்களுக்கே உப்புமா கிண்டி விடுவார்கள் என்றும், அடுத்ததாக மகேஸ்வரியிடம் அடிக்கடி முட்டி கொள்கிறீர்கள் போல, கண்ணாடியில் சொன்னேன் என கூறுகிறார். கடைசியாக ஜிபி முத்துவிடவும் நீங்கள் எழுந்து நில்லுங்கள் உங்களுக்காக ஒரு விஷயம் வைத்திருக்கிறேன் என கூறுகிறார். 

ஜிபி முத்து வெள்ளேந்தியாக பாதாம் பருப்பை எடுத்து காட்டுகிறார். பாதாம் தெரியுது... ஆதாம் தெரியுதா உங்களுக்கு. எவ்வளவு வறுத்த படுகிறார் தெரியுமா ஆதாம் என கமல் கூறியதும், ஆதாமா அது என்னது என திருதிருவென முழிக்கிறார். இந்த புரோமோ தான் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.