
அட்டகாசமான போட்டியாளர்களுடன் அமர்களமான ஆரம்பம்... தெறிக்கவிடும் கமல்ஹாசனின் ‘பிக்பாஸ் 6’ புரோமோ இதோ
சாதாரண மனிதர்கள், அசாதாரணமான கனவுகளுடன் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட துவக்க விழா இன்று நடைபெற உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் புரோமோவில் பேசி உள்ளார்.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் இன்று மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. 10 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 பேர் இதில் கலந்துகொள்ள உள்ளனர். வழக்கம்போல் கமல்ஹாசன் தான் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இதன் புதிய புரோமோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Add Asianetnews Tamil as a Preferred Source

அதில் கமல் பேசியதாவது : “ஒரு புதிய பயணத்தின் பிரம்மாண்டமான தொடக்கம். அட்டகாசமான போட்டியாளர்களுடன் அமர்களமான ஆரம்பம். சாதாரண மனிதர்கள், அசாதாரணமான கனவுகளுடன் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட துவக்க விழாவை காணத்தவறாதீர்கள்” என கமல் அந்த புரோமோவில் பேசியுள்ளார்.