Asianet News TamilAsianet News Tamil

ஆயிஷாவை நாமினேஷனில் மாட்டிவிட்ட ஜனனி... அதுக்கு அவுங்க சொன்ன காரணம் இருக்கே..! நீங்களே பாருங்க

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் ஆயிஷாவுடன் ஜனனி வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

First Published Oct 12, 2022, 9:54 AM IST | Last Updated Oct 12, 2022, 9:54 AM IST

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் தற்போது கிளப் ஹவுஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க் தொடக்கத்தில் ஜனனி உள்பட 4 போட்டியாளர்கள் குறைவாக கவனம் ஈர்த்தவர்கள் என்கிற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் வீட்டின் வெளியே தான் தூங்க வேண்டும் என்று பிக்பாஸ் அறிவித்தார். நேற்றைய எபிசோடில் அவர்கள் நன்றாக விளையாடும் பட்சத்தில் வேறு ஒருவரை தங்களுக்கு பதில் ஸ்வாப் செய்து வெளியில் படுக்க வைக்கலாம் என்றார் பிக்பாஸ்.

இதையடுத்து, நேற்று நன்றாக விளையாடிய ஜனனி, தற்போது ஆயிஷாவை ஸ்வாப் செய்வதாக அறிவித்த புரோமோ வெளியாகி உள்ளது. அதற்கு அவர் சொன்ன காரணம் என்னவென்றால், எனக்கு ஆயிஷாவுடன் சண்டை வரலாம் என யோசித்தேன் அதனால் அவரை ஸ்வாப் செய்கிறேன் என கூறினார். நான் அப்படி நினைக்கவில்லை என ஆயிஷா பதிலுக்கு சொல்ல, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதையடுத்து சக ஹவுஸ்மேட்ஸும் அவரை பேச விடாமல் தடுத்ததால் கடுப்பான ஆயிஷா, கண்ணீர் விட்டு அழுகிறார். இந்த காட்சிகள் புரோமோவில் இடம்பெற்று உள்ளன.

இதைப்பார்த்த் நெட்டிசன்கள் ஜனனியை திட்டித்தீர்த்து வருகின்றனர். இதெல்லாம் ஒரு காரணமா.. ஒருவேளை அவங்களுக்கு ஜோசியம் தெரிஞ்சிருக்குமோ.. இனி நடக்கப்போறதெல்லாம் சொல்றாங்களே என ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...இரண்டாம் நாளே பிக்பாஸ் வீட்டில் அழுகாச்சியாக மாறிய நடிகை..! அட கடவுளே இதெல்லாம் ஒரு பிரச்சனையா? வீடியோ..

Video Top Stories