Asianet News TamilAsianet News Tamil

கிளப் ஹவுஸ் ஆக மாறிய பிக்பாஸ் வீடு... அனல் பறக்கும் 2-வது புரோமோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் இந்த வாரத்திற்கான டாஸ்க் பற்றி சின்னத்திரை நடிகை சாந்தி படித்துக் காட்டுகிறார். அதில் கிச்சன், வெசல் வாஷிங், கிளீனிங், பாத்ரூம் என நான்கு அணிகளாக பிரிந்து பிக்பாஸ் கிளப் ஹவுஸ் ஆக மாறி இந்த டாஸ்க்கை செய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறார். அவ்வாறு நான்கு அணிகளாக பிரியும் ஹவுஸ்மேட்ஸ். ஒவ்வொரு அணியாக ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு சென்று தங்கள் வேலைகளை செய்கின்றனர். 

இதனை மற்ற அணியின் பிளாஸ்மா டிவியின் வழியே பார்த்து அவர்களுக்கு மதிப்பெண் அளிக்க வேண்டும் என்று அந்த டாஸ்க்கில் கொடுக்கப்பட்டுள்ளது. புரோமோவில் போட்டியாளர்கள் பரபரப்பாக வேலை செய்வதை பார்த்தால் நிச்சயம் அதன் மூலம் ஏதோ பிரச்சனை நடந்திருப்பது போல் தெரிகிறது.

Video Top Stories