பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழக்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மாறியுள்ள நடிகர் விஜய் சேதுபதி... மூன்று மாதத்திற்கு சேர்த்து வாங்க உள்ள சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

Share this Video

உலக நாயகன் கமல்ஹாசன்... தன்னுடைய திரைப்பட பணிகள் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து வெளியேறுவதாக கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்தார். இதை தொடர்ந்து விஜய் டிவி தரப்பும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து கூறி, அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விடைபெறுவது உறுதி செய்தது.

கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக யார்? பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், நடிகர் சூர்யா முதல் நயன்தாரா வரை பல நடிகர் நடிகைகளின் பெயர் இதில் அடிபட்டது. ஆனால் கடைசியில்... பிக்பாஸ் வீட்டிற்குள் ஒவ்வொரு வாரமும் அகம் டிவி வழியாக செல்லப்போவது விஜய் சேதுபதி என்பது உறுதியாகியுள்ளது.

இதை தொடர்ந்து விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மூன்று மாதத்திற்கும் சேர்ந்து சுமார் 50 கோடி வாங்கியுள்ளாராம். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Related Video