Asianet News TamilAsianet News Tamil

தம்மாத்தூண்டு டீ-க்காக மல்லுக்கட்டும் ஹவுஸ்மேட்ஸ்... பிக்பாஸ் வீட்டில் ஆரம்பித்த முதல் சண்டை- வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இடையே ஏற்பட்ட சண்டை காட்சிகள் அடங்கிய புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் 4 அணிகளாக பிரிந்து டாஸ்க் ஒன்றை விளையாடி வருகின்றனர். அப்போது கிச்சன் டீமில் இருக்கும் விஜே மகேஸ்வரி, இருவேளை தான் டீ தர முடியும் என போட்டியாளர்களிடம் தெரிவிக்கிறார். இதைக்கேட்டு கடுப்பான அசீம், நீங்க என்ன பிக்பாஸ் மாதிரி பேசுறீங்கனு மல்லுக்கட்ட அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது.

இதையடுத்து டைனிங் ஏரியாவில் அனைவரும் அமர்ந்திருக்கும்போது ஷிவின் பேசுகிறார், அப்போது மகேஸ்வரியும் இடையிடையே பேசியதால் கடுப்பாகும் ஷிவின், தனது டீம் மேட் ஆன மகேஸ்வரியிடமே கடிந்து கொள்கிறார். இவ்வாறு ஒரு டீக்காக ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சண்டைபோட்டுக் கொள்வது சற்று காமெடியாகவே உள்ளது.

இதையும் படியுங்கள்... பாலியல் துன்புறுத்தல் புகார்... அவரை உடனடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேத்துங்க - மகளிர் ஆணையம் கடிதம்

Video Top Stories