Asianet News TamilAsianet News Tamil

சிவானியுடன் காதல் சர்ச்சை... மனைவியுடன் விவாகரத்து - பிக்பாஸில் நுழைந்த சின்னத்திரை ஹீரோ அசீம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் சிவானிக்கு ஜோடியாக நடித்திருந்த அசீம், தற்போது பிக்பாஸில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் சின்னத்திரை பிரபலம் அசீம் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இவர் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி, பின்னர் சீரியல்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் சிவானிக்கு ஜோடியாக நடித்திருந்தார் அசீம். அப்போது இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் சர்ச்சை எழுந்தது.

அசீம் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆவார். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. குழந்தையை வாரம் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும் என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் அவனுடன் இருக்கும் நேரத்தை மிஸ் செய்வேன் எனவும், தனது மகனை பெருமைப்படுத்துவதற்காகவும் பிக்பாஸ் வீடுக்குள் செல்வதாக அசீம் தெரிவித்தார்.

Video Top Stories