ஜிபி முத்துவை தொடர்ந்து பிக்பாஸில் எண்ட்ரி கொடுத்த வட சென்னை இளைஞர்... யார் இந்த அசல் கோலார் - வீடியோ இதோ

BiggBoss 6 : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 10 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள், திருநங்கை ஒருவர் என மொத்தம் 20 பேர் கலந்துகொண்டுள்ளனர். 

First Published Oct 9, 2022, 7:29 PM IST | Last Updated Oct 9, 2022, 7:29 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் இரண்டாவது போட்டியாளராக எண்ட்ரி கொடுத்துள்ளவர் அசல் கோலார். சுயாதீன இசைக் கலைஞரான இவர் யூடியூப்பில் பிரபலமான ஜோர்தால என்கிற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனார். வட சென்னையை சேர்ந்த இவர் ஏராளமான சுயாதீன இசைப் பாடல்களையும் பாடி இருக்கிறார்.

இவர் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். பிக்பாஸ் மேடையில் ஜோர்தால பாடலை பாடியும் அசத்தினார் அசல். இவர் எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பேமஸ் ஆகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Video Top Stories