உலக இதய தினம் - மருத்துவ கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

உலக இதய தினத்தை முன்னிட்டு மதுரையில் மருத்துவ கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
 

Share this Video

உலக இதய தினம் செப்டம்பர் 29ம் தேதி அனுசரிக்கபட்டு வருகிறது. இந்த நிலையில் உலக இதய தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுரையில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள், மருத்துவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

மேலும் படிக்க:மதுரை மத்திய சிறையில் 22 கைதிகள் திடீர் விடுதலை ஏன்?

மூன்று மாவடி சந்திப்பில் துவங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சென்று மாட்டுதாவனியில் நிறைவு பெற்றது. பேரணியின் போது இதய ரத்தநாள நோய்கள் குறித்தும் மாரடைப்பு வராமல் தடுப்பது, அதற்கு உரிய நேரத்திற்குள் சிகிச்சை பெறுவது, இதய நோய்களை தவிர்க்க வழக்கமான நடைபயிற்சி, உடற் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை கைகளில் ஏந்தியபடி மாணவிகள் பேரணியில் நடந்து சென்றனர். 

Related Video