அதிமுக-பாஜககூட்டணி மீண்டும் அமையுமா?டெல்லியில் அமித் ஷாவுடன் பேசியது என்ன?-எடப்பாடிபழனிசாமி
டெல்லி சென்றுள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை செவ்வாய்க் கிழமையன்று சந்தித்துப் பேசினார். டெல்லியிலிருந்து தமிழ்நாடு புறப்படும் முன்னதாக விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.அப்போது அமித் ஷாவுடன் அரசியல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி," தேர்தலுக்கு இன்னமும் ஓராண்டுக்கு மேல் உள்ளது. எல்லோருமே தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி அமைப்பார்கள். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களின் கொள்கை என்றுமே நிலையானது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும். " என்றார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதே கூட்டணியில் இருக்கப் போகிறதா? என கேள்வி எழுப்பிய அவர், மக்களுடைய பிரச்சனைகளை முன்வைத்து அதனை தீர்ப்பதில் முனைப்பாக இருக்கும் கட்சியே அதிமுக எனக் கூறினார்.