வெப்ப அலை மூலமாக மிகப்பெரிய அழிவை நாம் சந்திக்க வாய்ப்புள்ளது .. அமைச்சர் மெய்யநாதன் தகவல் !

வெப்ப அலை மூலமாக மிகப்பெரிய அழிவை நாம் சந்திக்க வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளார் அமைச்சர் மெய்யநாதன்.

First Published Mar 5, 2023, 10:37 PM IST | Last Updated Mar 5, 2023, 10:37 PM IST

தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அமைச்சர் மெய்யநாதன். அப்போது, 'சுனாமியை சந்தித்திருக்கிறோம், புயலை சந்தித்திருக்கிறோம். ஆனால் இந்த  முறை நாம்  வெப்ப அலையை எதிர்கொள்ள இருக்கிறோம். முதல்வர் ஸ்டாலின் இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமான தமிழ்நாட்டில், திராவிட மாடல் ஆட்சியில் பொதுமக்களுக்கு மட்டுமில்லாமல், பல்லுயிர்களை பாதுகாப்பதும் முக்கியம்.வெப்ப அலை மூலமாக மிகப்பெரிய அழிவை நாம் சந்திக்க வாய்ப்புள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்’ என்று கூறினார்.

 

Video Top Stories