TVK Vijay

Share this Video

தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கு கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. மலை 3 மணிக்கு தொடங்கும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அக்கட்சித் தலைவர் விஜய் கோவை வந்தார்.கோவை விமான நிலையம் வந்த தவெக கட்சித் தலைவர் விஜய்க்கு, அங்கு திரளான தவெக தொண்டர்கள் , ரசிகர்கள் என பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு விஜய் கோவை வந்துள்ளதால் அவரை நேரில் காண ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்டதால் கோவை விமான நிலைய வளாகம் ஸ்தம்பித்தது.

Related Video