Vaiko on Hindi Imposition

Share this Video

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவையில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லாதது குறித்து கேள்வி எழுப்பினார்.மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகள், படுகொலைகள் மற்றும் கொடுமைகள் தொடர்கின்றன. எங்களுக்கு உள்ள மில்லியன் டாலர் கேள்வியே பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்வதை தவிர வேறு என்ன வேலை இருக்கிறது என்பதுதான். அவர் பிரைம் மினிஸ்டர் அல்ல, பிக்னிக் மினிஸ்டர்! இந்தி திணிப்பை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம். மத்திய பாஜக அரசின் கல்விக் கொள்கையை தொடர்ந்து எதிர்ப்போம். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை குப்பை தொட்டியில் தூக்கி வீச வேண்டும். புதிய கல்விக் கொள்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என வைகோ. தன்னுடைய ஆக்ரோஷ குரலில் அவர் முழங்கினார்.

Related Video