TN Budget 2025 | தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!
தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழு சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25-யை (Economic Survey of Tamil Nadu 2024-25) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் மார்ச் 13 ல் வெளியிட்டார். பொருளாதார ஆய்வு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிடுவது இதுவே முதல்முறை ஆகும்.இதை தொடர்ந்து 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மார்ச் 15 ல் தாக்கல் செய்கிறார்.