தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கைது!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அனுமதியின்றி போராட்டம்.

First Published Dec 20, 2024, 9:08 PM IST | Last Updated Dec 20, 2024, 9:10 PM IST

கோவை பாஷாவின் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த காவல்துறையை கண்டித்து கண்டன பேரணி நடைபெறும் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி இன்று கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர்.  இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.