சாராய ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் போல் ஸ்டாலின் சிறை செல்வார்!அதிமுக எம்.பி. தம்பிதுரை பரபரப்பு பேட்டி!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளின் மூலம் திமுக அரசு 1000 கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டு உள்ளது என்பதை அமலாக்கத்துறை உறுதி செய்துள்ளது. ஏற்கெனவே, டெல்லியின் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் மது விற்பனை மூலம் ஊழல் செய்து சிறை சென்றது போல தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் சிறை செல்வது உறுதி. மு. க. ஸ்டாலின் சிறைக்கு செல்வதை தவிர்க்கவே மும்மொழி கொள்கையில் நாடகம் ஆடி வருகிறார் இவ்வாறு தம்பிதுரை பேசினார்.