
Fair Delimitation
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் தமிழ் மண்ணில் நின்று கொண்டு, பிரதமர் தெளிவான உத்தரவாதம் அளிக்க வேண்டும் "மக்கள்தொகை வளர்ச்சியை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் வரவிருக்கும் எல்லை நிர்ணய நடவடிக்கையில் தண்டிக்கப்படாது. சதவீத அடிப்படையில் அவர்களின் நாடாளுமன்ற இடங்களின் பங்கு அப்படியே இருக்கும்."மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி இந்த வாக்குறுதியை பகிரங்கமாக வழங்க வேண்டும், தமிழக மக்களின் மனதில் உள்ள அச்சங்களைப் போக்க வேண்டும், அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.