"என்னாலும் வர முடியும்.. கட்சி கொடுத்த வண்டி இருக்கு".. திமுக இளைஞரணி மாநாடு - நெகிழவைத்த மாற்றுத்திறனாளி!

DMK Youth Wing Conference : திமுக இளைஞரணி மாநாடு இன்று காலை சேலத்தில் கோலாகலமாக துவங்கியது. திமுகவை சேர்ந்த பல தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

Share this Video

சேலத்தில் திமுகவின் இளைஞர் அணி மாநாடு வெகு விமர்சையாக துவங்கியது, நேற்று மாலை முதலே Drone கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடக்க துவக்கியது. பல லட்சம் திமுக நிர்வாகிகள் இந்த இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்ட நிலையில், கழக உடன்பிறப்புகள் பலரும் இந்த மாபெரும் விழாவில் பங்கேற்று பேசினர். 

மேலும் இந்த திமுக இளைஞரணி மாநாட்டின் போது 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் பல லட்சம் பேர் கூடிய இந்த இளைஞரணி மாநாட்டில் சேலம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் யாருடைய உதவியும் இன்றி தனியே அந்த மாநாட்டிற்கு வந்தது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. 

அவர் நமது ஏசியா நெட் தமிழ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தான் சேலத்தை சேர்ந்தவர் என்றும், தனது அப்பா காலத்தில் இருந்து சுமார் 40 ஆண்டுகளாக திமுகவில் இருப்பதாகவும், இளைஞர் அணி உறுப்பினராகவும் தான் இருந்து வருவதாகவும் கூறியுள்ளார். கே.என் நேரு அவர்களுடைய தலைமையில் நடந்த ஒரு விழாவில் தனக்கு இயந்திர வாகனம் ஒன்று வழங்கப்பட்டது என்றும், யாருடைய உதவியும் இன்றி கட்சிக்கொடுத்த வண்டியில் தானே தனியாக இந்த மாநாட்டிற்கு வந்ததாகவும் அவர் மகிழ்ச்சியோடு கூறினார். 

Related Video