BJP : பொள்ளாச்சி.. தொழில் வர்த்தக சபை தலைவர் மறைவு - நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்ன அண்ணாமலை!

BJP Leader Annamalai : பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன் மறைவையொட்டி அவர் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார் தமிழக பாஜக மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள்.

Share this Video

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் வசித்து வந்தவர் தான் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், தொழில் வர்த்தக சபையின் தலைவருமான ஜி.டி கோபாலகிருஷ்ணன், அவருக்கு வயது 79. மேலும் இவர் முன்னாள் அமைச்சர் ஒருவரின் உறவினரும் ஆவார். கடந்த சில நாட்களாகவே உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த கோபாலகிருஷ்ணன் கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி அதிகாலை காலமானார். 

இவருக்கு மேனகா மற்றும் லாவண்யா என்று இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று 30 ஆம் தேதி காலை பொள்ளாச்சி சென்ற தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், கோபாலகிருஷ்ணனின் மனைவி மற்றும் மகள்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

Related Video