Dmdk vs Admk | அணி மாறும் பிரேமலதா விஜயகாந்த்! கலைந்து போன இபிஎஸ் கூட்டணி கனவு!
கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் இந்த கூட்டணி போட்டியிட்ட அனைத்து இடங்களும் தோல்வியை தழுவியது. இந்த சூழ்நிலையில் தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கை விரித்தது தேமுதிகவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி மீது பிரேமலதா அதிருப்தியில் உள்ளார்.