தமிழ்நாட்டில் சிறைவாசிகளுக்கான புதிய உணவு முறை திட்டம்.. அமைச்சர் ரகுபதி அறிமுகம்

சிறைவாசிகளுக்கான புதிய உணவு முறை திட்டத்தை சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் அமைச்சர் எஸ்.ரகுபதி அறிமுகப்படுத்தி வைத்தார்.

First Published Jun 5, 2023, 9:24 PM IST | Last Updated Jun 5, 2023, 9:24 PM IST

நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கடந்த 10.04.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், சிறைத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, சிறைவாசிகளின் நலனுக்காக நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சிறைவாசிகளின் உணவுமுறை மற்றும் உணவின் அளவினை, ஆண்டுக்கு ரூ.26 கோடி கூடுதல் செலவினத்தில் மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, இன்று (05.06.2023) தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் திரு மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புழல் மத்தியசிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு இப்புதிய உணவுமுறை மற்றும் உணவின் அளவினை மாற்றியமைக்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதையும் படிங்க..ஒடிசா ரயில் சோகத்திற்கு ‘முக்கிய’ காரணம் இதுதான்.! ரயில்வே ஊழியர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் | முழு பின்னணி

Video Top Stories