முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி தான் நடிக்க வேண்டும் - வடிவேலு விருப்பம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை திருப்பாலைமேனேந்தல் பகுதியில் முதல்வரின் 70 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் புகைப்பட கண்காட்சி தொடங்கியுள்ளது.

தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறும் முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சியை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் கருமுத்து கண்ணன், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த புகைப்படக்கண்காட்சியை நகைச்சுவை நடிகர் வடிவேலு பார்வையிட்டார்.
தொடர்ந்து நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தின் அருமைத்தலைவர் மு.க.ஸ்டாலின். அவருடைய புகைப்படக்கண்காட்சியை தொடங்கி வைத்தது எனக்கு பெருமை. இங்கே உள்ளது வெறும் படங்கள் இல்லை. எல்லாம் உண்மை. முதல்வரின் வாழ்க்கை வரலாறு படங்களை கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன். மிசா காலத்தில் சிறைவாசம் அணிவித்ததை தத்துரூபமாக வைத்துள்ளனர். முதலமைச்சரின் வாழ்க்கை பயணம் குறித்த கதையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க வேண்டும் என்றார்.