
அறிவுள்ள யாரும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டார்கள்! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி!
தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை குறைக்க மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்படுகிறது. மத்திய பா.ஜ.க. அரசின் மும்மொழிக் கொள்கையை அறிவுள்ள யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றாமல் குறுக்கு வழியில் மும்மொழிக் கொள்கையை திணிக்க மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறது.இருமொழி கொள்கையை கூட அமல்படுத்த முடியாதவர்கள் நம்மை 3-வது மொழி கற்க சொல்கின்றனர். இவ்வாறு பழனிவேல் தியாகராஜன் கூறினார்.