Watch : பாலை ரோட்டில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள்

தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி கோவை ஆலந்துறை பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் பாலை சாலையில் கொட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

First Published Mar 19, 2023, 3:14 PM IST | Last Updated Mar 19, 2023, 3:14 PM IST

ஆவின் நிர்வாகத்திற்கு பால் வழங்கும் விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கையான பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி குரல் எழுப்பி வருகின்றனர். இன்னிலையில் கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், கோவை மாவட்ட விவசாய சங்கம் இணைந்து பால் விலையை உயர்த்த கோரியும் ஜந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் அடையாள  கண்டன ஆர்ப்பாட்டம் கோவை சிறுவாணி சாலை ஆலந்துறை, நாதேகவுண்டன்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் 150கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்ட கோஷங்கள் எழுப்பினர். மாட்டு தீவன மானியத்தை வழங்கிடு, பால் விலையை உயர்த்திட கோரியும், ஊக்கத்தொகையை வழங்கிட கூறி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் கனத்த இதயத்துடன் 150 லிட்டர் பாலை சாலையில் கொட்டி தங்கள் எதிர்பை தெரிவித்தனர். மேலும் பால் விலையை உயர்த்தி பால் லிட்டருக்கு ரூ.50 நிர்ணயம் செய்ய வேண்டும், கலப்பு தீவனத்திற்கு மானியம் வழங்க வேண்டும். 

சங்க பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கால்நடைகளுக்கு காப்பீடு முழுமையாக வழங்க பால் உற்பத்தியாளர்கள் வருடாந்திர ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பால் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தி விடுவதாக விவசாயிகள் எச்சரித்தனர். பால் விலை விவசாயிகள் உற்பத்தி செய்யும் எந்த பொருள்களுக்கும் விலை இல்லை, பால் விற்கும் விலையில் மாடுகளை வைத்து பராமரிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

ஆவின் பாலகம் உற்பத்தி லாப தொகை, ஊக்கத்தொகை போன்றவற்றை எதுவுமே கொடுக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்கத்து மாநிலம் கேரளாவில் ஒரு லிட்டருக்கு பால் ரூ.48 கொடுக்கிறது. தமிழக அரசு ஏன் கொடுக்க முடிவதில்லை என கேள்வி எழுப்பிவர், கேரள அரசு ஒரு லிட்டருக்கு 16 ரூபாய் அதிகமாக கொடுத்துள்ளதாக சுட்டிக்காட்டினார். எனவே தமிழக அரசு நல்ல ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

பால் விலையை உயர்த்த வில்லை என்றால் ஒரு வாரத்தில் பச்சாபாளையம் பகுதியிலுள்ள ஆவின் பாலகத்தை முற்றுகையிட போவதாகவும், தமிழக விவசாய சங்க தொண்டாமுத்தூர் வட்டாரத் தலைவர் ஆறுச்சாமி தெரிவித்தார். மேலும் இன்று நடைபெற்ற போராட்டம் கவனத்தை ஈர்க்கவேண்டியே நடத்தபட்டதாக தெரிவித்தவர், ஒரு வாரத்தில் தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்து அரசிடம் முறையிடுவோம் என்றார்.

இதையும் படிங்க..TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை அதிரடியாக மாற்றம்.. எந்தெந்த தேர்வுகள் எப்போது நடக்கும்.? முழு விபரம்

இதையும் படிங்க..1 நிமிஷத்துக்கு 5 லட்சம் கொடுங்க.! மாப்பிள்ளையிடம் ரகசிய டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்

Video Top Stories