"ஈஷாவை விட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் இந்த உலகத்திலேயே இல்லை" - ஈஷா பெண் துறவிகள்!

Isha Foundation : ஈஷாவை விட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் உலகத்திலேயே இருக்க முடியாது’ என்றும் தெரிவித்துள்ளனர் அங்குள்ள பெண் துறவிகள்.

Share this Video

ஈஷா பெண் துறவிகள் தொடர்பான ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் (18/10/2024) தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் அந்த இரு பெண் துறவிகளும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில் ‘இந்த தீர்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஈஷாவை விட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் உலகத்திலேயே இருக்க முடியாது’ என்றும் தெரிவித்துள்ளனர். 

மேலும் நாங்கள் விருப்பப்பட்டு தான் இந்த முடிவை தேர்ந்தெடுத்தோம். யாருடைய கட்டாயத்தின் பெயரிலோ அல்லது வற்புறுத்தலின் பெயரிலோ நாங்கள் இங்கு வரவில்லை. இந்த முடிவை உண்மையிலேயே நாங்கள் இந்தப் பாதையில் இருக்க வேண்டும் என்று நீண்ட வருடங்களாக இருந்த ஆசையினால் எடுத்தோம்” எனக் கூறியுள்ளார்.

Related Video