
திருப்பரங்குன்றம் முழு மலையும் முருகனுக்கு சொந்தம்.! H .ராஜா அதிரடி
ஆங்கிலேய தீர்ப்புப்படி திருப்பரங்குன்றம் முழு மலையும் முருகனுக்கு சொந்தம் என்று சொல்லி இருக்கிறார்கள் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கனிமொழிக்கு அரசியல் சட்டம் பற்றி என்ன தெரியும் என கேள்வி எழுப்பிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, பட்ஜெட் என்றால் என்ன தெரியுமா? ஏதாவது மாநிலத்திற்கு சிறப்பு திட்டம் இருந்தால் தான் அந்த மாநிலத்தின் பெயர் வரும். பெயர் வரவில்லை என்பதற்காக அது ஒரு மாநிலத்திற்கான பட்ஜெட் என கூறுகிறார்கள் என விமர்சித்தார். வீர தமிழச்சி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் கடைசி பந்தில் சிக்சர் அடித்துள்ளார். 7 லட்சத்தில் இருந்த வரி வரம்பை 12 லட்சம் வரை உயர்த்தி உள்ளதாகவும் எச். ராஜா தெரிவித்தார்.