தமிழ்நாடே ஓசில போனாலும் எனக்கு ஓசி டிக்கெட் வேண்டாம் - மூதாட்டி ஆவேசம்

கோவையின் இன்று காலை அரசு நகரப் பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி ஒருவர் எனக்கு ஒன்றும் ஓடி டிக்கெட் தேவை இல்லை, இந்தா காசு எனக்கு ஒரு டிக்கெட் கொடு என்று கேட்டு சக பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Share this Video

மகளிர் பயணம் செய்ய இலவசம்னு சொல்லிவிட்டு பொதுமக்களை ஓசி டிக்கட் என்று அவமான படுத்துவதா என்று கொந்தளித்த மூதாட்டி பேருந்துல் இருந்த சக பயணிகளின் கவனத்தை ஈர்த்தார். தமிழ்நாடே ஓசில போனாலும் சரி எனக்கு ஓசி டிக்கெட் வேண்டாம், இந்தா காசு எனக்கு டிக்கெட் கொடு என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீண்ட நேரம் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த மூதாட்டி ஒருவிதமாக சமாதானம் அடைந்தார். இந்த சம்பவத்தை அதே பேருந்தில் பயணம் செய்த சக பயணி தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Related Video