டாஸ்மாக் ஊழல் ஸ்டாலின் அச்சத்தில் இருக்கிறார்- எடப்பாடி கடும் விமர்சனம்!
சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியவுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து பேச முன்றனர். அதற்கு அனுமதி அளிக்கப்படாததால் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் ED முழு விசாரணைக்கு பிறகு யார் யார் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியும்? இது திராவிட மாடல் அல்ல! விளம்பர மாடல் அரசு என கூறினார்.