திமுக இளைஞரணி மாநாடு.. நாளை நடைபெறும் பிரம்மாண்ட விழா - நிகழ்ச்சிகளை இன்று துவங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்!

DMK Youth Wing Conference : சேலத்தில் நாளை ஜனவரி 21ம் தேதி மாபெரும் அளவில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெறுகின்றது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் சேலம் சென்றுள்ளார். 

Share this Video

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற பிறகு நடைபெறும் மாபெரும் விழாவாக கருதப்படுகிறது திமுகவின் இளைஞர் அணி மாநில மாநாடு. சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை ஜனவரி 21 ஆம் தேதி இது நடைபெறுகின்றது. இந்த விழாவில் சுமார் 5 லட்சம் திமுக நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 

இந்நிலையில் இந்த இளைஞரணி மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அவர்களால் இன்று மாலை சேலம் சென்றடைந்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் அவர்களும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் சேலம் சென்றனர். நாளை நடைபெறும் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலினும், அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் இன்று மாலை நடந்த ட்ரோன் கண்காட்சியையும் அவர்கள் துவங்கி வைத்தனர்.

Related Video