மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
Murasoli Selvam : முரசொலி நாளேட்டின் ஆசிரியராக பணியாற்றி வந்த முரசொலி செல்வம் நேற்று அக்டோபர் 10ம் தேதி காலமானார்.
கடந்த சில நாட்களாகவே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வந்த முரசொலி செல்வம் நேற்று அக்டோபர் மாதம் 10ஆம் தேதி அதிகாலை காலமானார். பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய உயிர் பிரிந்தது. இந்த நிலையில் நேற்று மதியமே அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் முரசொலி செல்வத்தின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
தேமுதிக தலைவர் பிரேமலதாவும் நேரில் வந்து மறைந்த முரசொலி செல்வத்தின் மனைவிக்கு ஆறுதல் கூறினார். அதேபோல தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜயின் மனைவி சங்கீதாவும் நேற்று நேரில் வந்து முரசொலி செல்வத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை துறை பிரபலங்களும் மறைந்து முரசொலி செல்வத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில் தற்போது அவருடைய இறுதி ஊர்வலமானது தொடங்கி இருக்கிறது.