கோவையில் ரம்ஜான் பண்டிகையில் பாலஸ்தீனத்தை காப்பாற்ற வேண்டி இஸ்லாமியர்கள் தொழுகை!!
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று காலை பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடக்கிறது. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர்.கோவையில் இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்தை காப்பாற்றவும் என்ற முழக்கங்களை எழுப்பும் சுவரொட்டிகளை ஏந்திய மாணவர்கள் இஸ்லாமிய அமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.