Rainbow Coimbatore : கோவையில் சில்லென்ற வானிலை.. விண்ணை அலங்கரித்த இரு வானவில் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Rainbow : கோவையில் தெரிந்த இரு வானவில்களை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர், அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
கோவையில் இன்று சனியன்று காலை வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில், பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில பகுதிகளில் சாரல் மழை பொழிந்து மனதை வருடும் வண்ணம் பெய்தது. அப்போது தான் இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான வானவில் அழகா விண்ணை அலங்கரித்து நின்றது.
உடனே மேலும் ஒரு வானவில் தென்பட்டதால் அதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் ஆர்வமாக பார்த்து புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து அது வைரலாகி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த நிகழ்வானது கோவை மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி பேசும் பொருளாக மாறி வருவதாக கூறினார்.
பெரும்பாலான பொதுமக்கள் இதுபோன்று இரண்டு வானவில்கள் இதுவரை பார்த்ததில்லை என்றும் இந்த அரிய நிகழ்வு கோவையில் நடந்து இருப்பது அனைவரிடத்திலும் ஆச்சிரியத்தையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.