
கோவையை சேர்ந்த ஐடி நிறுவனம் மாஸ் அறிவிப்பு! ஊழியர்களுக்கு $1.62 மில்லியன் போனஸ்!
கோவையை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி ஐடி நிறுவனமான கோவை.கோ தனது 140 ஊழியர்களுக்கு மொத்தம் $1.62 மில்லியன் (ரூ. 14.5 கோடி) போனஸாக வழங்குவதாக அறிவித்துள்ளது."ஒன்றாக நாம் வளர்கிறோம்" (Together We Grow) என்ற திட்டத்தின் கீழ், டிசம்பர் 31, 2022, அல்லது அதற்கு முன்பு நிறுவனத்தில் பணியேற்ற அனைத்து ஊழியர்களும், மூன்று ஆண்டுகள் சேவையை முடித்தவுடன், அவர்களின் மொத்த ஆண்டு சம்பளத்தில் 50% போனஸாக பெறுவார்கள்.