"அட நானும் வாக்கிங் தான் வந்தேன்".. இரவு நேரத்தில் ஷாக் கொடுத்த காட்டு யானை - தெறித்து ஓடிய தம்பதி! Video!

Coimbatore : கோவை அருகே வாக்கிங் செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்த தம்பதி, காட்டு யானையை பார்த்ததும் பதறி ஓடிய சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

First Published Jun 23, 2024, 7:41 PM IST | Last Updated Jun 23, 2024, 7:41 PM IST

கோவை மாவட்டம் அருகே உள்ள இடம் தான் மருதமலையை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி. இங்கு கடந்த சில நாட்களாக சுமார் 11 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கோவையில் நல்ல பருவநிலை நிலவுவதால், அவ்வப்போது இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் ஊருக்குள் வலம் வருகின்றனர்.

அப்படி வரும் யானைகளை மீண்டும் காட்டிற்குள் விரட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் வனத்துறையினர். இந்த சூழலில் தான் நேற்று சனிக்கிழமை இரவு, மருதமலை அருகே உள்ள பாரதியார் பல்கலைக்கழக அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் மாலை நேரத்தில் நடைப்பயிற்சி செல்ல ஒரு தம்பதி வெளியே வந்துள்ளனர்.

அப்போது அதே பகுதியில் காட்டு யானை ஒன்று வலம்வர, அதை கண்டு அதிர்ந்த அந்த தம்பிகள் வீட்டிற்கு அலறியடித்து ஓடினர். அந்த யானையும் வீட்டின் கதவை துதிக்கையால் நுகர்ந்துவிட்டு, எந்தவித பிரச்சனையும் செய்யாமல் வீட்டை விட்டு சென்றுள்ளது. அந்த சம்பவத்தின் CCTV வீடியோ இப்பொது வைரலாகி வருகின்றது.