Mk Stalin: அமெரிக்காவில் டிரைவரே இல்லாத காரில் பயணித்த முதல்வர் ஸ்டாலின்
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் ஜாகுவார் நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரில் பயணம் செய்தார்.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்கும் சென்று பணிகளை மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு நலளும் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டு வருகிறார்.
இந்நிலையில் ஜாகுவார் நிறுவனத்தின் ஓட்டுநரே இல்லாத தானியங்கி காரில் முதல்வர் ஸ்டாலின் பயணம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.