#Breaking: சென்னையில் தமிழிசை சௌந்தர்ராஜன் கைது!காவல் துறையினருடன் வாக்குவாதம்!!

Share this Video

மும்மொழி கொள்கை தொடர்பாக பாஜக தலைமையிலான மத்திய அரசு விளக்கம் அளித்து வரும் நிலையில், மாநில அரசு அதனை தீர்க்கமாக எதிர்த்து வருகிறது.இந்நிலையில், தென் சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில், மக்களை நேரில் சந்தித்து, மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற வந்திருந்த தமிழிசை சௌந்தர்ராஜனை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்பதாக கூறி அதிகாரிகள் கைது செய்ய முற்பட்டனர்.காவல்துறை வாகனத்தில் ஏற மறுத்த தமிழிசை, காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தார். மேலும், கையெழுத்து வாங்க வருவது எப்படி சட்டம் ஒழுங்காக இருக்கும்? அமைதியான முறையில் கையெழுத்து வாங்க செல்வோரை தடுப்பது ஏன்? என வாக்குவாதம் செய்தார்.

Related Video