தமிழ் கடவுள் முருகனுக்கு காவடி எடுத்து நடனமாடிய பாஜக தலைவர் அண்ணாமலை

கோவையில் நடைபெற்று வரும் நொய்யல் திருவிழாவில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காவடி எடுத்து நடனமாடிய நிகழ்வு அனைவரையும் வெகுவாக ஈர்த்தது.

Share this Video

கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் நடைபெற்றுவரும் நொய்யல் திருவிழாவின் 5ம் நாள் நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது காவடி எடுத்து நடனமாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மேலும் நொய்யல் ஆரத்தி வழிபாட்டிலும் கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், உக்ரைன், ரஷ்யா போருக்கு பின்னர் உலக நாடுகளில் 200 சதவீதம் அளவுக்கு எரிவாயு உருளையின் விலை உயர்ந்த நிலையிலும், இந்தியாவில் உயராமல் மத்திய அரசு கட்டுப்பத்தியுள்ளது. காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுப்பதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே கர்நாடகா அரசு கேள்விக்குறியாக்குவதாக குற்றம் சாட்டி உள்ளார்.

Related Video