Attur : தேர்தல் பணி.. பைக்கில் சென்ற கணவன் மனைவி - நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் கணவர் பரிதாப பலி!

Attur Election : ஆத்தூர் பகுதியில் தேர்தல் பணிக்காக சென்ற ஆசிரியரின் கணவர், அங்கு நடந்த சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

First Published Apr 19, 2024, 1:00 PM IST | Last Updated Apr 19, 2024, 1:00 PM IST

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜானி பிரகாஷ் (39) இவரது மனைவி அனிதா (39) இவர் சேலம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இன்று நடைபெறும் மக்களவை தேர்தலுக்காக சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சந்தனகிரி அரசு தொடக்கப்பள்ளியில் தேர்தல் பணிக்காக, அனிதா தனது கணவர் ஜானி பிரகாஷ் உடன் இரு சக்கர வாகனத்தில் அனிதாவின் தாய் வீட்டான ஏத்தாப்பூரில் இருந்து ஆத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர் 

அப்போது தளவாய்பட்டி பிரிவு சாலையின் அருகே அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது நாய் குறுக்கே வந்ததால் நிலைத்திடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி கணவர்  ஜானி பிரகாஷ் உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த நிலையில் அனிதா சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து ஜானி பிரகாஷின் உடலை கைப்பற்றிய ஆத்தூர் ஊரக போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Video Top Stories