கூட்டணி தொகுதி எண்ணிக்கை குறித்து அமித்ஷா சொன்ன வார்த்தை! விக்கித்து போய் நின்ற எடப்பாடி!
அமித்ஷா-எடப்பாடி சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. சந்திப்பு இரு தரப்பிலும் சுமுகமாகவும் சீரியசாகவும் நடந்துள்ளன.சீட் ஷேரிங் பற்றி விவாதிக்கப்பட்ட போது, பாஜகவுக்கு என தனியாக அமித் ஷா பேசவில்லை. மாறாக, 'தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ' என்று தான் பேசியுள்ளார். அதாவது, அதிமுகவுக்கும் என்.டி.ஏ.வுக்கு 234 தொகுதிகளை சரிபாதியாக பிரித்துக் கொள்ளலாம் என்று அமித்ஷா சொல்ல, எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் அனைவரும் ஏற்க மறுத்தனர். பல்வேறு சதவீத கணக்குகள் சொல்லப்பட்டு, அதிமுகவுக்கு 70 சதவீதம், என்.டி.ஏ.வுக்கு 30 சதவீதம் என்று அதிமுக தரப்பில் முன் வைக்கப்பட்டன. eps