மதுரையில் 8 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு; தலைமறைவான தந்தையை தேடும் போலீசார்!!
மதுரையில் 8 வயது சிறுமி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் அவரது தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை பாரதியார் ரோடு பகுதியில் உள்ள வ.உ.சி தெருவைச் சேர்ந்த காளிமுத்து - பிரியதர்ஷினி தம்பதிக்கு 8 வயதில் தர்ஷினி என்ற பெண் குழந்தை உள்ளது. காளிமுத்து குடும்பத்துடன் வ.உ.சி தெருவில் வசித்து வந்தார். இந்த நிலையில், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி வருவதாக அக்கம் பக்கத்தினர் மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க:உலக இதய தினம் - மருத்துவ கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டில் வந்து பார்த்தபோது 8 வயது சிறுமி தர்ஷினி சடலமாக கிடந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, சிறுமியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள காளிமுத்துவை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து எட்டு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.