காவல்துறையை அவமானப்படுத்திய இளைஞர்கள்... தியாகி இமானுவேல் குருபூஜையில் அராஜகம்..! பரபரப்பு வீடியோ..

காவலர்களை  மிரட்டும் தோணியில் டிக் டோக் வீடியோ பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Share this Video

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே காரியாபட்டியை அடுத்த கே.கரிசல்குளத்தில் இருந்து தியாகி இமானுவேல் குருபூஜைக்கு அரசுப் பேருந்தில் சென்றவர்களுக்கு பாதுகாப்பாக இரண்டு காவலர்கள் உடன் சென்று உள்ளனர் அப்போது, சில இளைஞர்கள், உடனிருந்த காவலர்களை மிரட்டும் தொனியில் டிக் டோக் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்தனர். 

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், டிக் டோக் வீடியோவில் இருந்த, கே.கரிசல்குளத்தைச் சேர்ந்த வினித், சந்தோஷ்ராஜா, வேப்பங்குளத்தைச் சேர்ந்த மருது செல்வம், ராமகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். டிக் டோக் வீடியோ பதிவிட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான சதீஷ்குமார், மோகன்ராஜ் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது

Related Video