இராஜபாளையத்தில் சாஸ்தா கோவில் ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு! இளைஞரை கயிறு கட்டி மீட்ட வனத்துறை!

விருதுநகர் சாஸ்தா கோவில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மறு கரையில் மாட்டிக்கொண்ட இளைஞரை வனத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

Share this Video

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது சாஸ்தா கோவில். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. மேலும் விடுமுறை தினமான இன்று இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்காக சாஸ்தா கோவில் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

 இதில் சாஸ்தா கோவில் அமைந்துள்ள வனப்பகுதிக்கு கீழே உள்ள ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளித்துக் கொண்டிருந்த ஒரு இளைஞர் மறுகரையில் மாட்டிக் கொண்டார். உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் விரைந்து வந்த வனத்துறையினர் மறுகரையில் மாட்டிக்கொண்டிருந்த இளைஞரை பத்திரமாக கயிறு கட்டி மீட்டனர்.

Related Video