Watch : ஏலத்திற்கு வரும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்! இழப்பீடு தராததால் நீதிமன்றம் நவடிக்கை!
ரூ.2.35 கோடி இழப்பீடை நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருக்கு வழங்காததால் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏல அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
மதுரை அரசரடியைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் சவரிமுத்து,
இவர் கடந்த 1998 ல் காஷ்மீர்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலம் சுங்கச் சாவடி முதல் சாத்தூர் வரை சாலை பணிகளை மேற்கொண்டார். 30 சதவீத பணிகளை முடிதத் நிலையில் திடீரென வேறு ஒருவருக்கு ஒப்பந்த பணிகளை மாற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதனை அடுத்து சவரிமுத்து விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தனக்கு இழப்பீடு கோரி கடந்த 2002 ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இவருக்கு உரிய இழப்பீடை வழங்க நீதிபதி உத்தரவிட்டனர். ஆனால் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. தொடர்ந்து அவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
அதன் பேரில் கடந்த 2022ம் ஆண்டு, 2.35 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தற்போது வரை உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. அவர் விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமானந்த குமார், உத்தரவின் பேரில், நீதிமன்ற இளநிலை கட்டளப் பணியாளர் ஜெயக்குமார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சுவற்றில் ஏல அறிவிப்பு நோட்டீஸை ஒட்டியுள்ளனர். இந்த நோட்டீஸில் வருகிற மார்ச் 31 ம்தேதி ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.