முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா; அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

தமிழக முதல்வர்  ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம்  இராஜபாளையத்தில் இன்று பிறந்த  குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த சட்டமன்ற உறுப்பினர்.

Share this Video

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறந்த 3 பெண் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவித்தார்.

இதைத் தொடர்ந்து மகப்பேறு மருத்துவமனை மற்றும் இராஜபாளையம் பி எஸ் ஆர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளுக்கு பழம், ஹார்லிக்ஸ் போன்ற பொருட்களை வழங்கினார்.

Related Video