Viral : பேருந்துக்குள் மழை! நடத்துனரிடம் வாக்குவாதம்! - ரணகளமான பேருந்து!

அரசு பேருந்தில் அருவியாய் கொட்டிய மழைநீரால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். தொடர்ந்து, நடத்துனரிடம் கடும் வாக்குவாதம் செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

First Published May 23, 2023, 10:58 AM IST | Last Updated May 23, 2023, 10:58 AM IST

விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை சென்ற அரசு பேருந்தின் மேற்கூரை பழுது ஏற்பட்டதால் லேசாக பெய்த மழைக்கு கூட தாங்காமல் மழைநீர் அருவி போல பேருந்தினுள் கொட்டியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

தொடர்ந்து மழை நீர் உள்ளே ஒழுகியதால் பேருந்து பயணிகள் நணைந்தபடி செல்லும் அவல நிலை ஏற்பட்டது. அப்போது ஒழுகும் பேருந்தில் பயணிக்க டிக்கெட் எடுக்க மாட்டோம் என கூறி பயணிகள் நடத்துனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பேருந்தினுள் சலசலப்பு ஏற்பட்டது.



கோடை மழைக்கே இந்த நிலைமை என்றால், மழைக்காலத்தன் இது போன்ற பேருந்துகளின் நிலை என்னவாகும் என பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் இது போன்ற பேருந்துகளை விரைந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டு என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Video Top Stories