ராதிகா சரத்குமார் பிரச்சாரத்தின் போது மூதாட்டி செய்த செயல்.. வைரலாகும் வீடியோ!

விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பாலவனத்தம் கிராமத்தில் பிரச்சாரத்தின் பவுன் தாய் என்ற மூதாட்டி பாட்டிய பாடி அசத்திய வீடியோ வைரலாகி வருகிறது. 

Share this Video

விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பாலவனத்தம் கிராமத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார். அப்பொழுது அந்த கூட்டத்தில் இருந்து பவுன் தாய் என்ற மூதாட்டி வேட்பாளர் ராதிகா சரத்குமாரை பார்த்து அவர் நடித்த கிழக்குச் சீமையிலே படத்தில் ''உழுதா புழுதியிலும் உன் முகமே தெரியுதம்மா'' என்ற பாடலைப் பாடி ராதிகா சரத்குமாரின் நடிப்பை பாராட்டினார். ''நன்றாக செயல்படுவேனா'' என்று ராதிகா கேட்டதற்கு ''அது உங்க மனசைப் பொருத்தது'' என்று மூதாட்டி கூறினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

Related Video