வெள்ளத்தின்போது ஏற்பட்ட பிரசவ வலி; கர்ப்பிணியை பத்திரமாக மீட்ட பொதுமக்கள்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அன்பின் நகரம் கிராமத்தில் தரைப்பாலம் மூழ்கியதை அடுத்து கர்ப்பிணிப் பெண்ணை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.

First Published Dec 19, 2023, 6:57 AM IST | Last Updated Dec 19, 2023, 6:57 AM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை, தாயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 18-மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஏழாயிரம்பண்ணை அருகே அன்பின்நகரம்- ஏழாயிரம்பண்ணை செல்லும் சாலையில் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.

இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த அபர்ணா(வயது 20) என்ற நிறைமாத கர்ப்பிணி பெண் இடுப்பு வலி ஏற்பட்டதால் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அந்த பெண்ணை அன்பின்நகரம் கிராமத்தில் இருந்து தரைப்பாலத்தை கடந்து ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Video Top Stories