விருதுநகரில் தொல்பொருள் கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகளில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தொல்பொருள் கண்காட்சியை தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை வைப்பாறுபகுதியில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட ஆராய்ச்சி பணிகளில் பெறப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள், தற்போது பெறப்பட்டுள்ள தொல்பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்காக கண்காட்சியாக வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவித்திருந்தார்.
இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் தொல்பொருள் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.